தருமபுரி, செப்டம்பர் 24 | புரட்டாசி 08:
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இம்முகாமில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.S. மகேஸ்வரன் (B.Com., B.L.,) தலைமையேற்றார். அவருடன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு. N. பாலசுப்பிரமணியம், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
இம்முகாமில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 77 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும், புதியதாக 52 மனுக்கள் பெறப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.