தருமபுரி, செப்டம்பர் 27 | புரட்டாசி 11:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 6-வது வார்டு காவாப்பட்டியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தலைமையில் பூமி பூஜை நடத்தி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த பணிகள் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் மூலம் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. சாக்கடைவாய் வசதியுடன் கூடிய இந்த புதிய சாலை, 6-வது வார்டு காவாப்பட்டியில் வசிக்கும் பொதுமக்களின் நீண்ட நாள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைகிறது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் பத்தேகான், வகாப்ஜான், குலாப், ரோஹித், சாதிக் பாஷா, மசியுல்லா, மோகன், ஜெயந்திமோகன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், திமுக நகர துணை செயலாளர் மாதேஷ், நகர அவைத் தலைவர் அமானுல்லா, ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் குமரன், மோகன், கிளை செயலாளர்கள் சதானந்தன், ராஜீ, ராமமூர்த்தி, மியான், ஆறுமுகம், ராஜேஷ், தொழிலாளர் அணி நிர்வாகிகள் சக்திவேல், குமார், ராஜேந்திரன், பாபு, மாதேஷ், அன்பு, விஜய், பெண்கள் பிரதிநிதிகள் சாக்கியம்மாள், செல்லியம்மாள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகி ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.