தருமபுரி, செப்டம்பர் 24 | புரட்டாசி 08:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் "மலைகளின் மாநாடு" வருகிற செப்டம்பர் 27ம் தேதி மாலை 4 மணிக்கு தருமபுரி வள்ளலார் திடலில் நடைபெற உள்ளது.
இந்த மாநாடு மலைகளின் பாதுகாப்பு மற்றும் அதன் மூலம் மனித குலத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது. அரசு மலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தவும், இயற்கை அன்பர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வமுள்ளோர் பெரும் திரளாக கலந்துகொள்ளுமாறு கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் கையூட்டும் மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை மாநில துணைத்தலைவர் பா. ஜெபசிங் கூறியதாவது: "இயற்கையை நேசிக்கக்கூடியவர்கள், மலையைக் காக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் பெரும் திரளாக கலந்துகொள்ளுமாறு பேரன்போடு கேட்டுக்கொள்கின்றேன்." மாநாட்டில் மலைப்பகுதிகளின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நீர்வளம் பெருக்குதல் குறித்த முக்கிய கருத்துகள் முன்வைக்கப்பட உள்ளன.