தருமபுரி, செப்டம்பர் 19 | புரட்டாசி 03:
மழை & சாகுபடி நிலவரம்
-
தருமபுரி மாவட்டத்தின் ஆண்டு இயல்பான மழையளவு 942.00 மி.மீ ஆகும்.
-
2025-ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை 414.58 மி.மீ மழை பெய்துள்ளது.
-
2025-26-ஆம் ஆண்டிற்கான சாகுபடி இலக்கு 2,03,030 ஹெக்டேர், இதில் 17.09.2025 வரை 80,108 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
விதை & உர விநியோகம்
-
மாவட்டத்தில் நெல், சிறுதானியம், பயறு, எண்ணெய் விதைகள், பருத்தி, கரும்பு ஆகிய பயிர்களுக்கு தேவையான 1088 மெட்ரிக் டன் விதைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 222.687 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
-
2025-26 ஆண்டிற்கான வருடாந்திர உரத் தேவை 41,030 மெட்ரிக் டன். இதற்கான யூரியா, டிஏபி, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் வங்கிகள் மற்றும் உர விற்பனை நிலையங்களில் போதிய இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
-
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் உயிர் உரங்கள் (அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உள்ளிட்டவை) 29,499 அளவில் இருப்பில் உள்ளன.
பயிர் காப்பீடு & பட்டு வளர்ப்பு
-
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 9,043 விவசாயிகள் 7,382.06 ஏக்கர் பரப்பளவில் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.
-
பட்டு வளர்ச்சித் துறையின் இலக்கு 542 ஏக்கர், ஆகஸ்ட் 2025 வரை 254 ஏக்கர் மல்பரி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விவசாயக் கடன் & சர்க்கரை உற்பத்தி
-
2025 ஆகஸ்ட் 31 வரை, 18,825 விவசாயிகளுக்கு ரூ.20,131.03 இலட்சம் பயிர் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
-
தற்போது, தருமபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 1,368 குவிண்டால், கோபாலபுரம் சுப்பரமணிய சிவா கூட்டுறவு ஆலையில் 23,728 குவிண்டால் சர்க்கரை இருப்பு உள்ளது.

