தருமபுரி, செப்டம்பர் 22 | புரட்டாசி 06:
புறநோயாளிகள் பதிவு பிரிவு, மருந்தகம், தீவிர சிகிச்சை பிரிவு, அவசர கால பிரிவு, இயல்முறை சிகிச்சை, எலும்பு முறிவு, பெண்கள் நலப் பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு சென்று நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். எம்.ஆர்.ஐ. மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பிரிவுகளை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு ஸ்கேன் அறிக்கைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், நோயாளிகளின் உதவியாளர்கள் காத்திருக்கும் இடத்தில் போதிய அமர்வு வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், மருத்துவமனை மற்றும் வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். குடிநீர், மின்சாரம், கழிவறை போன்ற அடிப்படை தேவைகள் குறித்தும், நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா எனவும் அவர் ஆய்வு செய்தார்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் நோயாளிகளை அன்பாகவும் ஆதரவாகவும் அணுகி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வலியுறுத்தினார். இந்த ஆய்வின் போது மருத்துவமனை முதல்வர் டாக்டர் மனோகரன், உள்ளிருப்பு மருத்துவர் டாக்டர் நாகேந்திரன், குழந்தைகள் நல மருத்துவர்கள் டாக்டர் ரமேஷ்பாபு, டாக்டர் சந்திரசேகர் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.