தருமபுரி, செப்டம்பர் 25 | புரட்டாசி 09 :
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாட்டின் ஏழை மகளிரை சுயஉதவிக் குழுக்களின் மூலம் வலுப்படுத்தி, சமூக-பொருளாதார மேம்பாட்டையும், சுயசார்பு தன்மையையும் ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டத்தில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் (CMTC) மூலமாக, ஊராட்சிகளில் மக்கள் அமைப்புகளின் திறன் மேம்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், தற்காலிக அடிப்படையில் சமுதாய வளப் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
சமுதாய வளப் பயிற்றுநர்களுக்கான தகுதிகள் :
-
குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில்லை.
-
பயிற்சி நடத்த உடற்தகுதி மற்றும் திறன் அவசியம்.
-
சுயஉதவிக் குழுவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
-
மாவட்ட, வட்டார, ஊராட்சி அளவில் குறைந்தது 5–10 பயிற்சிகளில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.
-
கைபேசி செயலிகளைப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
-
சுயஉதவிக் குழுவில் வாராக்கடன் நிலுவை இல்லாமல் இருக்க வேண்டும்.
-
குடும்ப ஒத்துழைப்பு அவசியம்.
-
அரசியலில் முக்கிய பொறுப்பு இல்லாதவராகவும், தனியார் நிறுவனங்களில் முழுநேர/பகுதி நேர பணியில் இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.
-
விண்ணப்பிக்கும் போது, தொடர்புடைய குழுவின் தீர்மான நகல் இணைக்கப்பட வேண்டும்.