மாரண்டஹள்ளி, செப்டம்பர் 10 (ஆவணி 25):
மாரண்டஅள்ளி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை மாரண்டஅள்ளி போலீசார் கடத்திக்கொள்மேடு ஏரி மதகு பகுதியில் ரோந்து சென்றபோது, புதரில் கேட்பாரற்ற நிலையில் நாட்டு துப்பாக்கி கிடப்பதை கண்டனர். உடனடியாக அதனை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த நாட்டு துப்பாக்கி யாருடையது, எந்த நோக்கத்திற்காக புதரில் பதுக்கி வைக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கத்திற்காக பதுக்கி வைத்திருக்கக்கூடும் என்ற கோணத்தையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.