பாலக்கோடு, ஆகஸ்ட் 23 (ஆவணி 7):
சமீபத்தில், ஆகஸ்ட் 20ம் தேதி, ராணி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பி அவரது வீட்டிற்கு சென்றார். ஆனால் அப்போது கணவர் குமார் இல்லாததால், அவர் தொலைபேசியில் பேசியபோது பெங்களூரில் வேலை செய்து வருவதாகவும், மறுநாள் காலை வரும்படி கூறியதாகவும் தகவல்.
அந்நேரத்தில் குமாரின் தாய் காவேரியம்மாள், “8 ஆண்டுகளாக வராமல் இப்போது எதற்காக வந்தாய்? நீ இருந்த இடத்திற்கே போ” என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராணி அதே இரவு எலி மருந்து குடித்தார். உடனடியாக குடும்பத்தினர் அவரை பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். பின்னர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 22ம் தேதி இரவு அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.