தருமபுரி, ஆக 23 | ஆவணி 7 -
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 13 ஆண்டுகளாக சமூக நலனுக்காக பல்வேறு மனிதநேய பணிகளில் ஈடுபட்டு வரும் மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் தலைவர் சதீஸ் குமார் ராஜா அவர்களுக்கு ஏற்கனவே மதிப்புறுமுனைவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் சமூக சேவைகளுக்கான பாராட்டுச் சின்னமாக குளோபல் யூமன் பீஸ் பல்கலைக்கழகத்தின் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் மை தருமபுரி அமைப்பினருக்கு வழங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கின் போது உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்கியதற்காகவும், இரத்த தானம், தினந்தோறும் உணவு சேவை, ஆதரவற்ற உடல்களின் நல்லடக்கம் போன்ற பல்வேறு சமூக பணிகளுக்காகவும் அவர் இந்த விருதைப் பெற்ற நிலையில், மை தருமபுரி அமைப்பின் சேவைகளை முன்னிறுத்தும் வகையில், செயலாளர் தமிழ்செல்வன், அமைப்பாளர் கிருஷ்ணன், அர்ஜூனன், மல்லிகேஸ்வரா டீ ஸ்டால் சென்னன் ஆகியோர் மதிப்புறுமுனைவர் விருது பெற்றனர்.
மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றது, அமைப்பினருக்கு சமூக சேவைகளில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி, தொடர்ந்து மனிதநேயம் போற்றும் பணிகளைச் செய்ய ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.
நமது தகடூர்குரல் நிறுவனம் சார்பில், முனைவர் சதீஸ் குமார் ராஜா அவர்களுக்கும் மை தருமபுரி அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். 🎉