பாலக்கோடு, ஆகஸ்ட் 04 | ஆடி 20 -
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தண்டுகாரன அள்ளி கிராமத்தை சேர்ந்த முனிராஜ் (30), ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த துர்காதேவி (20) என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் மதியம், கடைக்கு செல்வதாக கூறி வீடு விட்டுச் சென்ற துர்காதேவி, பின்னர் வீடு திரும்பவில்லை. மனைவி காணாமல் போனதால், முனிராஜ் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் எங்கும் காணவில்லை.
இதையடுத்து, மனைவியை கண்டுபிடிக்கக் கோரி, பாலக்கோடு காவல் நிலையத்தில் முனிராஜ் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து துர்காதேவியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.