தருமபுரி, ஆக 04 | ஆடி 19 -
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இயங்கி வரும் சைனிக் பள்ளியில், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழ்நாடு பூர்விக மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையாக வருடத்திற்கு ரூ.25,000 வழங்கப்பட்டு வருகிறது. இச்சலுகை 2022–2023 கல்வியாண்டில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கானது. குறிப்பாக, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் கைம்பெண்களின் சிறார்களும் இதில் பயன் பெறலாம்.
மேலே குறிப்பிடப்பட்ட கல்வியாண்டில் பயின்றும், இச்சலுகையை பெறாதவர்கள், தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்களும், உடனடியாக ஒட்டப்பட்டி பழைய குவார்ட்டர்ஸில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் உரிய விண்ணப்பப் படிவத்தை பெற்று சமர்ப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு 04342-297844 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.