பாலக்கோடு, ஆகஸ்ட் 04 | ஆடி 19 -
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கோவிலூரான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (23), கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அந்தப் பகுதியில் வசிக்கும் 23 வயது பெண்ணுடன் பழகி வந்த சீனிவாசன், கருத்து வேறுபாடு காரணமாக 2 மாதங்களுக்கு முன்பு, அந்தப் பெண் கோயம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், 3 மாதத்திற்குள் திருமணம் செய்து கொள்வதாக சீனிவாசன் எழுத்து மூலம் உறுதி அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் ஊருக்கு வந்த அவர், ஜூலை 31 அன்று “கோயம்புத்தூருக்கு செல்கிறேன்” என பெற்றோரிடம் கூறி சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் தொடர்புக்கு வரவில்லை, எங்கு சென்றார் என்றும் தெரியவில்லை. இதனால், மகனை கண்டுபிடிக்கக் கோரி, சீனிவாசனின் தாய் லட்சுமி, பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.