பாலக்கோடு, ஆக 03 | ஆடி 18 -
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள தண்டுகாரண அள்ளி கிராமத்தைச் சேர்ந்த உண்ணாமலை (60) என்பவர், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் தனது வீட்டை கட்டும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம், அவரது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த கட்டிட மேஸ்திரியை, அப்பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை (55), அவரது மகன் பிரபாகரன் (30) மற்றும் வெண்மணி (25) ஆகியோர், “வேலை செய்யக்கூடாது” என்று தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தட்டி கேட்ட உண்ணாமலையை, மூவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
கடுமையாக காயமடைந்த உண்ணாமலை, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மூவர்மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.