பென்னாகரம், ஆக 20 | ஆவணி 4 -
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்துக்குட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையின் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடம் ஏற்படுத்தப்பட்டது. உணவு முறையில் சிறுதானிய உணவின் முக்கியத்துவம், எளிய உடற்பயிற்சி, தனிநபர் சுத்தம், சுற்றுப்புற தூய்மை, யோகா, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் குறித்து மருத்துவர்கள் மாணவர்களிடம் விரிவாக பேசினர். மேலும், மாணவர்களுக்கு எளிய யோகாசனங்கள், உடற்பயிற்சி மற்றும் மனமகிழ்ச்சி பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் முனுசாமி, சித்த மருத்துவர் அன்புராணி, ஹோமியோபதி மருத்துவர் சங்கர், சிகிச்சை உதவியாளர் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் மா. பழனி செய்திருந்தார். சிறப்பு விருந்தினர்களுக்கு "விடுதலைப் போரில் தர்மபுரி" என்ற புத்தகம் பரிசளிக்கப்பட்டது.
விழாவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகேஷ், ஆசிரியர் பயிற்றுநர் இளங்கோவன், பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, திலகவதி, அனுப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.