தருமபுரி – ஆக. 28 (ஆவணி 12) -
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் (MBC/DNC) சமூக மாணவர்களுக்கு 2025-26 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கான புதிய மற்றும் புதுப்பித்தல் (Fresh & Renewal) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆண்டு குடும்ப வருமானம் ரூ.2.50 இலட்சத்தை மீறாத மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய கட்டாயக் கட்டணங்கள் (கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம்) அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மத்திய மற்றும் மாநில அரசின் பிற கல்வி உதவித்தொகைத் திட்டங்களில் ஏற்கனவே பயன் பெறும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 2025-26 கல்வியாண்டிற்கான புதிய விண்ணப்பங்கள் 31.10.2025க்குள் மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் 30.09.2025க்குள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் சான்றிதழுடன் பரிந்துரையுடன் அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
மாணவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக கல்வி நன்மைகள் பெற்று முன்னேற வேண்டுமென தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் அறிவித்துள்ளார்.

