தருமபுரி, 11 ஆகஸ்ட் 2025 | ஆடி 26 -
தருமபுரி மாவட்டத்தில் 2025-2026ஆம் ஆண்டிற்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆகஸ்ட் 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி, அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை விரைவாகவும் முழுமையாகவும் செயல்படுத்தும் நோக்கில், தமிழ் வளர்ச்சித்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம், தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பழைய கூட்டரங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும். பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறைகள், வாரியங்கள், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், தட்டச்சர்கள் மற்றும் மாவட்ட நிலை, கோட்ட நிலை, வட்ட நிலை அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டியுள்ளது.
பயிலரங்கத்தின் போது, ஆட்சிமொழித் திட்டத்தின் அவசியம், அரசாணைகள், செயலாக்க நிலைகள், மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழில் மட்டுமே ஒப்பமிடுதல் குறித்து விரிவாக விளக்கப்படும்.