தருமபுரி, ஆக 11 | ஆடி 26 -
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ – TAHDCO) சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினருக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான சிறப்பு பயிற்சி (German Language Test Training) வழங்கப்படுகிறது.
தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்ததாவது: தாட்கோ மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், B.Sc நர்சிங் மற்றும் GNM டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஒன்பது மாதங்கள் காலம் ஜெர்மன் மொழி பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சியின் போது விடுதி வசதியும் முழுமையாக தாட்கோவால் ஏற்பாடு செய்யப்படும்.
தகுதி நிபந்தனைகள்
-
ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆக வேண்டும்.
-
B.Sc Nursing அல்லது GNM Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
வயது: 21 முதல் 35 வயது வரை.
-
ஆண்டு குடும்ப வருமானம்: ரூ.3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
வேலை வாய்ப்பு
பயிற்சி முடித்த பின், தகுதியான நபர்களுக்கு ஜெர்மனியில் நர்சிங் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆரம்ப ஊதியம் மாதம் ரூ.2,50,000/- முதல் ரூ.3,00,000/- வரை இருக்கும்.