தருமபுரி, 11 ஆகஸ்ட் 2025 | ஆடி 26 -
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 510 மனுக்களை பெற்றுக்கொண்டார். இம்மனுக்கள் சாலை அமைத்தல், குடிநீர் வழங்கல், பேருந்து சேவை, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கியவையாக இருந்தன.
மாவட்ட ஆட்சித்தலைவர், இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அனுப்பி, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு. சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. செம்மலை, மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் திரு. ஆ.க. அசோக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.