தருமபுரி, ஆக. 22 | ஆவணி 6 -
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு Forklift Operator பயிற்சி வழங்கப்படவுள்ளது என்று தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
தாட்கோவின் திறன் மேம்பாட்டு திட்டங்களின் ஒரு பகுதியாக வழங்கப்படும் இப்பயிற்சி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறைகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க தகுதி
-
ஆதிதிராவிடர் / பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
-
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
-
குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
வயது 18 முதல் 35 வரை இருக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சித்தலைவர், திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள், “இளைஞர்கள் இப்பயிற்சி வாய்ப்பை பயன்படுத்தி, வேலை வாய்ப்பை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.