Type Here to Get Search Results !

செட்டிக்கரை ஊராட்சியில் வகுப்பு வாரிய சொத்து உரிமை கோரி மனு.


தருமபுரி, 11 ஆகஸ்ட் 2025 |ஆடி 26 -


தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை ஊராட்சி கான்காலனி, பள்ளக்கொள்ளை, குரும்பட்டி, டீ கடை, அல்லையன் கொட்டாய் பகுதிகளில் உள்ள வகுப்பு வாரிய சொத்து தொடர்பாக பொதுமக்கள் மனு வழங்கினர். கிட்டத்தட்ட 175 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நிலம், 1886 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே வகுப்பு வாரிய சொத்தாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த நிலத்தில் சுமார் 1,000 குடும்பங்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.


அரசு வகுப்பு வாரிய சொத்து என பதிவு செய்யப்பட்டதால் பத்திரப் பதிவு செய்ய இயலாமல், குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, அந்தந்த நில உரிமையாளர்களுக்கு சொத்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஷ்வரன், பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக, தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் இன்று வழங்கினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies