ஏரியூர், ஆக. 30 | ஆவணி 14 :
ஏரியூர் ஒன்றியம் இராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைவாணி, மூத்த ஆசிரியர் சுப்பிரமணி, இளையராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாணவர்களின் நலன் குறித்தும், பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவை என்பதையும், தொலைதூரத்தில் இருந்து பயிலும் மாணவர்களுக்காக அரசு விடுதி அமைக்க வேண்டும் என்பதையும் தீர்மானித்து நிறைவேற்றினர். இந்த கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இறுதியில் ஆசிரியர் பெருமாள் நன்றி கூறினார்.