இதனைத் தொடர்ந்து, காவல்துறை, வருவாய், கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தீயணைப்பு, வேளாண்மை, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய சுமார் 100 அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் அரசு சாரா அமைப்பினருக்கு நற்சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரால், தொழில்நுட்ப வாகனத்தின் மூலம் தீ தடுப்பு மற்றும் மூவர்ண விழிப்புணர்வு நிகழ்ச்சி காட்சிப்படுத்தப்பட்டது. பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாணவர்கள் கிராமிய நடனம், தேசப்பற்று பாடல்கள் மற்றும் மாவட்டத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.
விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஜி.கே. மணி, திரு. கே.பி. அன்பழகன், திரு. எஸ்.பி. வெங்கடேஷ்வரன், மேற்கு மண்டல ஐ.ஜி. திரு. செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.