பென்னாகரம், ஆக 09 | ஆடி 24 -
தேமுதிக கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாநிலம் முழுவதும் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி மற்றும் பென்னாகரம் பகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பாப்பாரப்பட்டியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பது, சோம்பட்டியில் பஸ் நிறுத்தம் இல்லாததால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் இல்லாமை, கொலை, கொள்ளை, செயின் பறிப்பு போன்ற குற்றச்செயல்கள் அதிகரிப்பது போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, மக்கள் விரும்பும் மாற்றம் வர வேண்டும்.
வருகிற ஆகஸ்ட் 22 அன்று விஜயகாந்த் நடித்த 100வது படம் கேப்டன் பிரபாகரன் மீண்டும் வெளியிடப்படுகிறது. ஜனவரி 9 அன்று கடலூரில் நடைபெறவுள்ள மாநாடு, மதுரை மாநாட்டை விட சிறப்பாக அமைய வேண்டும். ‘தேமுதிகவிற்கு நிகர் தேமுதிக தான்’ என்பதை தொண்டர்கள் நிரூபிக்க வேண்டும்,” என்றார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.