பாலக்கோடு, ஆக.06 | ஆடி 21 -
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் செயல்பட்டு வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ராஜேஸ்கண்ணா புதிய மோட்டார் வாகன ஆய்வாளராக நேற்று (06.08.2025) பொறுப்பேற்றுக் கொண்டார். முன்பு அவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் மோட்டார் ஆய்வாளராக பணியாற்றிய நிலையில், தமிழக அரசு அவருக்கு பாலக்கோடு அலுவலகத்திற்கு பணியமர்த்தல் செய்து உத்தரவிட்டது.
பாலக்கோடு அலுவலகத்தில் 11வது மோட்டார் ஆய்வாளராக பதவியேற்ற ராஜேஸ்கண்ணா, தனது உரையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் தணிக்கையில் மோட்டார் வாகன சட்டங்களை பின்பற்றுவது கட்டாயமாக செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
புதிய மோட்டார் வாகன ஆய்வாளருக்கு, அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர் பயிற்சி நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தனர். இதற்கு முன் பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றிய பாலசுப்ரமணியம், தற்போது தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.