தருமபுரி, ஆக 9, | ஆடி 24 -
முதல்வர் அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டமும், அமைச்சர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. ரூபன் சங்கர் ராஜ், தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி. லட்சுமி நாட்டான் மாது, முன்னாள் அமைச்சர் முனைவர். பி. பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. தடங்கம் பெ. சுப்பிரமணி, திரு. மனோகரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு. சிவக்குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் திரு. பெ. நாகராஜி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திருமதி. சித்ரா, கைம்பெண் நலவாரிய உறுப்பினர் திருமதி. ரேணுகாதேவி, ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் திரு. சரவணன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. காயத்ரி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.