தருமபுரி, ஆக. 9 | ஆடி 24 -
தருமபுரி வனத்துறை அலுவலகத்திலிருந்து பட்டாளம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை, 24 மணி நேரமும் பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கியப்பாதையாகும். கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியான மழையால், சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால், அந்தப் பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். சேற்றினால் ஒரு விபத்தும் ஏற்பட்டது. இந்த நிலையை அறிந்த மை தருமபுரி NGO சாலை பாதுகாப்பு சேவை திட்ட பொறுப்பாளர் ர. கோகுல்ராஜ் மற்றும் அமைப்பாளர் அ. சையத் ஜாபர் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, மழைநீரை வடிகால் அமைத்து சாலையை சீரமைத்தனர். இதன் மூலம், விபத்துகள் ஏற்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் செய்யவேண்டிய பணியை பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தன்னார்வு அமைப்பு செய்ததை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.