தருமபுரி, ஆக 04 | ஆடி 20 -
துவக்க விழாவில், பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் முனைவர் ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார். தனது உரையில், “முதுகலைப் படிக்கும் போதே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி, வாழ்க்கையில் வரும் சவால்களை சமாளித்து வெற்றியடைய வேண்டும். மேலும், கைபேசி மற்றும் பிற அறிவியல் தகவல் தொடர்பு சாதனங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும்” என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் செல்வபாண்டியன் அவர்கள் வரவேற்புரையாற்றி, மையம் கடந்த 10 ஆண்டுகளாக உயர்கல்வித் துறையில் புரிந்த சாதனைகள், நிதி உதவிகள் மற்றும் அதன்மூலம் மேம்படுத்தப்பட்ட ஆய்வகங்கள் பற்றிச் சிறப்பித்தார். பின்னர், கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் செங்குட்டுவேலன் நன்றியுரை வழங்கினார்.
இந்த முகாமில், ஆராய்ச்சி மையத்தின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், கமலம் சர்வதேச பள்ளி தாளாளர் உள்ளிட்ட நிபுணர்கள் தொடர்ந்து வரும் நாட்களில் சிறப்புரையாற்றவுள்ளனர். மாணவர்களுக்கு தகவல் தொடர்பு திறன் மேம்பாடு, தலைமைத்துவ பயிற்சி, போட்டித் தேர்வுகள் விழிப்புணர்வு, வாழ்வியல் வழிகாட்டுதல் போன்ற தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்ச்சியை ஆங்கிலத் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் சரண்யா, இரண்டாம் ஆண்டு மாணவிகள் ஜெயஸ்ரீ மற்றும் கலைமணி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.