தருமபுரி, 11 ஆகஸ்ட் 2025 | ஆடி 26 -
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
-
வீட்டுமனை பட்டா வழங்கல் – தருமபுரி மாவட்டத்தில் வாழும் பட்டா இல்லாத போயர் இன மக்களுக்கு இலவச பட்டா மற்றும் வீடு கட்டிட நடவடிக்கை.
-
உள்ளாட்சி பதவிகளில் ஒதுக்கீடு – கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு தனி ஒதுக்கீடு.
-
கல் தொழிலாளர்கள் உரிமைகள் – நிலத்தடி கல் உடைக்கும் தொழிலுக்கு தனிச் சட்டம், உரிமம் வழங்கல்.
-
ஒகேனக்கல் உபநீர் திட்டம் – விவசாய நிலங்களைப் பாசனத்திற்கு ஏரி, குளங்களில் நீர் நிரப்ப நடவடிக்கை.
-
சாதிவாரி கணக்கெடுப்பு – ஒவ்வொரு சமூகத்தின் உட்பிரிவுகளையும் கணக்கெடுப்பில் பதிவு செய்தல்.
-
கல் குவாரிகள் ஒதுக்கீடு – பிணைத் தொகை இல்லாமல் 20% குவாரிகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கல்.
-
இளைஞர், மகளிர் தொழில் முயற்சி – அடமானமின்றி மானிய வங்கி கடன் வழங்கல்.
-
போயர் நல வாரியம் – 13 பிரிவுகளாக வாழும் போயர் மக்களுக்கு மாநில அளவில் வாரியம் அமைத்தல்.
-
ஒரே சாதி அங்கீகாரம் – கல்வி, வேலை, அரசியல் இட ஒதுக்கீடு ஒரே சாதி அடிப்படையில் வழங்கல்.
-
மதுவிலக்கு நடவடிக்கை – டாஸ்மாக் கடைகள் மூடுதல், தென்னை/பனை கள் இறக்க அனுமதி.