தருமபுரி, ஆகஸ்ட் 10 (ஆடி 25):
பல உதவியாளர்கள் பேசியதன் பேரில் கல்லூரி நிர்வாகம் ரூ.1.5 இலட்சம் கட்டணத்தை குறைத்தது. ஆனால் மீதமிருந்த ரூ.8 இலட்சத்தைச் செலுத்த வேண்டிய நிலை தொடர்ந்தது. இந்த தகவலை டாக்டர் மோகனசுந்தரம் அவர்கள் ஒரு வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்ததை தொடர்ந்து, தருமபுரி உறவுகள் குழு சார்பில் ரூ.83,200 நன்கொடை வழங்கப்பட்டது.
பின்னர், 2025 ஜனவரியில் விஜய் பாய்ஸ் 2002 பள்ளி நண்பர்கள் குழுவும் ரூ.1,60,000 நன்கொடையாக வழங்கியது. இவ்விரு தரப்பினரும் சேர்த்து மொத்தம் ரூ.2,43,200 வழங்கினர். மீதமிருந்த தொகையும் பல நற்பண்புள்ளவர்களின் உதவியால் 2025 பிப்ரவரியில் முழுமையாக செலுத்தப்பட்டது.
இதையடுத்து, டாக்டர் மாலினிக்கு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் இருந்து பதிவு சான்றிதழ் கிடைத்தது. நன்றியைத் தெரிவிக்க, அவர் மற்றும் அவரது உறவினர்கள் தருமபுரிக்கு வந்து, தருமபுரி உறவுகள் குழு மற்றும் விஜய் பாய்ஸ் 2002 குழுவினருக்கு நேரில் நன்றி தெரிவித்தனர். மேலும், அவருக்கு பெயர் பதித்த ஸ்டெதஸ்கோப் மற்றும் ஒயிட் கோட் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.