Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே தொலைத்தொடர்பு நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்.


பென்னாகரம், ஆக. 20 | ஆவணி மாதம்3 –


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மாமரத்துபள்ளம் அரசு கலைக்கல்லூரியில் தொலைத்தொடர்பு நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முதல்வர் முனைவர் சங்கர் தலைமை தாங்கினார். கல்லூரியின் நுகர்வோர் குழு ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் முனைவர் வெங்கடாசலம் வரவேற்புரை ஆற்றினார்.

நுகர்வோர் ஆதரவு குழு உறுப்பினர் ஜான். கே. திருநாவுகரசு முக்கிய உரையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிகள், இணையத்தில் பாதுகாப்பு, இணைய குற்றங்களை புகார் செய்வது, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், பொருட்களின் தரம் மற்றும் ரசீது பெறும் அவசியம் குறித்து விரிவாக விளக்கினார்.


மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத் தலைவர் சம்பத் குமார், இந்தியா செஞ்சுலுவை சங்க மாவட்ட பொருளாளர் மணிவண்ணன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க செயலாளர் பெரியசாமி, மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் முனைவர் கதிர்வேல் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies