Type Here to Get Search Results !

தருமபுரியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் – மகளிர் உரிமை திட்டத்திற்கு பெரும் வரவேற்பு.


தருமபுரி, ஆக. 19 | ஆவணி 3 –


தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில், நகராட்சி 8, 9, 10 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த மக்களுக்காக “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, குறிப்பாக மகளிர் உரிமை திட்டத்திற்காக பெண்கள் பெருமளவில் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். அதோடு, இ-சேவை மையம் மூலம் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பட்டா உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்ட நன்மைகளுக்கான விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டது.

மருத்துவ முகாமும் இணைந்து நடைபெற்றதால், பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு, இரத்த பரிசோதனை உள்ளிட்ட சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முகாமில் ஒன்பதாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் எ. மாதேஸ்வரன் நேரில் பார்வையிட்டு, சுகாதார பரிசோதனையில் பங்கேற்றார். மேலும், நகர மன்ற தலைவர் லட்சுமி, ஆணையர் சேகர், டி. எ.குமார், சூர்யா, ரவி, சாந்தி ரூபி ஆகியோர் உட்பட அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies