பென்னாகரம், ஆகஸ்ட் 2 | ஆடி 17 -
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில், அவ்லியா அல்லாஹ் ஹஸ்ரத் யாரப் அவர்களின் உரூஸ் மற்றும் சந்தனக்குட விழா, சந்தனக்குடம் ஊர்வலத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. பென்னாகரத்தில் அமைந்துள்ள ஹஸ்ரத் யாரப் நிஸானிலிருந்து, பென்னாகரம் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி P.M. தவுலத்பாஷா தலைமையில் பாத்திஹா நடைபெற்று, தப்ரூக் வழங்கப்பட்டது.
பென்னாகரம் சங்கம் குரூப்ஸ் பி.கே. நவாப், தேன்கனிக்கோட்டை ஹஸ்ரத் யாரப் தர்கா கமிட்டி தலைமையில், பென்னாகரம் குலாம் முஸ்தபா, ஹஸ்ரத் யாரப் கமிட்டி கௌரவ தலைவர் பாபு, தலைவர் அபூபக்கர், செயலாளர் ராஸுல்லா மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில், சந்தனக்குடம் ஊர்வலம் பேண்ட் வாத்தியம், வானவேடிக்கை மற்றும் புகாராக்களின் ஜர்பாத் வித்தைகளுடன் நடைபெற்றது.
ஊர்வலம் ஆசூரூப் கானாவிலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் ஆசூரூப் கானாவை வந்தடைந்தது. பின்னர் பாத்திஹாவுக்கு பின் தப்ரூக் மற்றும் சந்தனம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பென்னாகரம் ஹஸ்ரத் யாரப் கமிட்டியினர் செய்திருந்தனர். விழா மற்றும் ஊர்வலத்தின் போது, பென்னாகரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.