தருமபுரி – ஆக. 26 (ஆவணி 10) -
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அனுமதியின்றி மரங்களை வெட்டி சேதப்படுத்திய சம்பவம் இடம்பெற்றது.
பள்ளி வளாகத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சில மரங்கள் வெட்டப்பட்டதாக தலைமை ஆசிரியர் தமிழ்வாணன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஆச்சாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் மகன் கார்த்திக் என்பவர் பள்ளி வளாகத்தில் அனுமதியின்றி நுழைந்து மரங்களை வெட்டி சேதப்படுத்தியதும், அவரிடம் இருந்து மரம் வெட்ட பயன்படுத்திய இயந்திரமும் கைப்பற்றப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு தருமபுரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
.gif)

