தருமபுரி – ஆக. 27 (ஆவணி 11)
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு ஆலோசனை கூட்டம், மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்பி தலைமையில், தருமபுரி மாவட்டக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், கிளைகள் தோறும் கூட்டங்களை நடத்துவது, ஓரணியில் உறுப்பினர் சேர்க்கையை சிறப்பாக செய்த ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக செயலாளர்கள், BLC, BLA-2 பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தருமபுரி மற்றும் பென்னாகரம் தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்தும், கழக ஆக்கப்பணிகள் மற்றும் தேர்தல் பணி தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் அவைத்தலைவர் செல்வராஜ், தருமபுரி தொகுதி பொறுப்பாளர் செங்குட்டுவன், பென்னாகரம் தொகுதி பொறுப்பாளர் பாரி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், தர்மசெல்வன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைசெல்வன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகா தேவி ஆகியோர் உட்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.