Type Here to Get Search Results !

பாலக்கோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


தருமபுரி, ஆகஸ்ட் 15, 2025 (ஆடி 30) – 


பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் கரகதஹள்ளி ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், LIG பகுதி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள தேசிய கொடி கம்பத்தில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.


மகாகவி பாரதியார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச் சங்கம் (TNHB பாலக்கோடு) சார்பில், சங்க செயலாளர் எண். சரவணன் தலைமையில் விழா நடைபெற்றது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பி. கோவிந்தசாமி தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.


நிகழ்ச்சியில் சங்க துணை செயலாளர் ஏ. லோகநாதன், துணை தலைவர் திருமதி. அம்மாசியம்மாள், திருமதி. சாந்தா முனியப்பன், திருமதி. சரஸ்வதி, திருமதி. யாசோதா சரவணன், திரு. மாதன், திரு. சி. சீனிவாசன், திரு. முனியப்பன், திருமதி. சாந்தம்மாள், திருமதி. உஷா முனிரத்தினம், சட்ட தூண் மாவட்ட நிர்வாகி திரு. பி. கே. சிவா, திரு. சீரஞ்சிவி, TSTC ஓட்டுநர் திரு. பழனிசாமி, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் திரு. இளங்கோ, திரு. கோவிந்தராஜ், திரு. வாசுதேவன், திரு. சந்திரமோகன், திரு. அயூப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், குடியிருப்பு பொது மக்கள், மாணவர்கள், குழந்தைகள், மற்றும் சங்க உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies