தருமபுரி, ஆகஸ்ட் 15, 2025 (ஆடி 30) –
தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் அடுத்த மாதங்களில் நடைபெற உள்ளன. கடந்த ஆண்டு குண்டல்பட்டி பகுதியில் உள்ள லிட்டில் ஹார்ட்ஸ் மனநல காப்பக நண்பர்கள், இந்தப் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களையும் கோப்பைகளையும் வென்றனர். அப்போது, மை தருமபுரி அமைப்பினர் இவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களாக காலணிகளை வழங்கினர்.
இந்த ஆண்டும் நடைபெறவுள்ள முதலமைச்சர் கோப்பை போட்டிக்காக, காப்பகத்தில் உள்ள 20 நண்பர்களுக்கு தேவையான காலணிகளை மை தருமபுரி அமைப்பினர் வழங்கினர். இதற்கு ஆதரவாக இருந்த மை தருமபுரி அமைப்பின் ஆலோசகர் மற்றும் பத்திர எழுத்தாளர் சி. கே. கணேஷ் அவர்களுக்கு சிறப்பு நன்றி தெரிவிக்கப்பட்டது.
காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி, லிட்டில் ஹார்ட்ஸ் மனநல காப்பக நிர்வாகிகள் செந்தில் மற்றும் விஜயலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது. மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமைப்பாளர் கிருஷ்ணன், சையத் ஜாபர், தன்னார்வலர்கள் கணேஷ், கோகுல்ராஜ், குணசீலன், வள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
.gif)

.jpg)