Type Here to Get Search Results !

இலக்கியம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பிரச்சனைகள் குறித்து சரமாரி கேள்விகள்.


தருமபுரி, ஆகஸ்ட் 15, 2025 (ஆடி 30) – 


தருமபுரி அருகே வெண்ணாம்பட்டியில் உள்ள பெரியார் நகரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இலக்கியம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள், தங்களுடைய பகுதியில் குப்பைகள் சுத்தம் செய்யப்படாதது, கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாதது, குடிநீர் வராதது போன்ற பிரச்சனைகளை வெளிப்படுத்தினர். மேலும், கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என குற்றம் சாட்டினர்.


இலக்கியம்பட்டி ஊராட்சி செயலாளர் சரவணன் மற்றும் உதவி திட்ட அலுவலர், பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்தனர். கூட்டத்தில் அரசு அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies