Type Here to Get Search Results !

பாலக்கோடு மணியகாரன் கொட்டாய் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.


பாலக்கோடு, ஆகஸ்ட் 15 | ஆடி 29 -


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகிலுள்ள மணியகாரன் கொட்டாய் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


பின்னர் பக்தர்கள் கரகம், மாவிளக்கு எடுத்தும், அம்மன் வேடம் அணிந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலை சென்றடைந்தனர். அங்கு பொங்கல் வைத்து, கோழி, கிடா பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஊர் கவுண்டர்கள், மந்திரிகவுண்டர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக மேற்கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies