தருமபுரி, ஆக 14 | ஆடி 29 -
ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டம் போலசார் கிராமத்தை சேர்ந்த 23 வயதான ராஜேஷ் நாயக் வேலை தேடி தருமபுரி வந்திருந்தார். கடந்த வாரம் இரவு, தருமபுரி பைபாஸ் சாலையில் சாலையோரம் நடந்து சென்றபோது திடீரென மயக்கம் அடைந்து விழுந்ததில் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது.
உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டபோதிலும், பொருளாதார காரணங்களால் இறுதி சடங்கு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ‘மை தருமபுரி’ அமரர் சேவை அமைப்பினர், தருமபுரி நகர காவல் நிலைய காவலர் அருண் அவர்களின் உதவியுடன், தருமபுரி ரோட்டரி எரிவாயு தகன மையத்தில் உடலை நல்லடக்கம் செய்தனர்.
இறுதி அஞ்சலியில், அமைப்பின் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர் செந்தில், தன்னார்வலர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், இறந்தவரின் அஸ்தி அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ‘மை தருமபுரி’ அமரர் சேவை இதுவரை மொத்தம் 159 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளது.
.gif)

.jpg)