தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகரில் உள்ள பழமையான ஸ்ரீ செளடேஸ்வரி சடையப்பநாதர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தேய்பிறை பிரதோஷ நாளை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு தேன், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அத்துடன் மூலவருக்கும் அபிஷேகமும் நடத்தப்பட்டு, பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது.
சிவபெருமானை பிரதோஷ நாளில் வழிபடுவதால் முற்பிறவி பாவங்கள் நீங்கி, பயம் விலகி, வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் பெருகும் என ஐதீகம் கூறுகிறது. இதனை நம்பி நூற்றுக்கணக்கான பக்தர்கள் "அரோகரா" கோஷம் எழுப்பி இறைவனை தரிசித்தனர்.
.gif)

.jpg)