Type Here to Get Search Results !

கம்மாளப்பட்டி கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.


பாலக்கோடு, ஆகஸ்ட் 21 | ஆவணி 5 -


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்தின் கம்மாளப்பட்டி கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பாலக்கோடு திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ. கருணாநிதி தலைமையிலும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆமணி சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்றனர்.


முகாமின் துவக்க நிகழ்வில் தாசில்தார் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகா, கணேஷ்குமார், ஜோதிகனேஷ், தொகுதி ஒருங்கிணைப்பாளர் முனியப்பன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.


காட்டம்பட்டி மற்றும் கம்மாளப்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு தேவைகள் தொடர்பாக துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தனர்.


மேலும், மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆனந்தன், நஞ்சப்பன், ஒன்றிய பொருளாளர் பூமணி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் திலிப், கிளை செயலாளர்கள் முருகன், சேகர், முனிராஜ், ஊராட்சி செயலாளர்கள் ஞானவேல், நாகராஜ், வருவாய் ஆய்வாளர் காளிஸ்வரன் உள்ளிட்டோர் முகாமில் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies