பென்னாகரம், ஆக 19 | ஆவணி 3–
“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று பென்னாகரம் ஒன்றியத்தின் ஜக்கம்பட்டியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் முகாமில் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடியாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பட்டா மாற்ற ஆணைகள், பிறப்பு சான்றிதழ்கள், மின்சார இணைப்பு பெயர் மாற்ற ஆணைகள், வேலை உறுதி திட்ட அடையாள அட்டைகள், மருத்துவ காப்பீட்டு அட்டைகள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மருத்துவ துறையின் சார்பில் மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.
திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 176 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. நகர்ப்புறங்களில் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் 46 சேவைகள் வழங்கப்பட உள்ளன. மனுக்கள் உடனடியாகத் தீர்க்கப்படக்கூடியவைகளுக்கு உடனடியாகவும், பிறவற்றிற்கு அதிகபட்சம் 45 நாட்களுக்குள் தீர்வு அளிக்கப்படும் என ஆட்சித் தலைவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்டிருந்த 1.25 இலட்சம் கனஅடி நீர்வரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, மாவட்ட அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.