பென்னாகரம், ஆகஸ்ட் 10 | ஆடி 25 -
பென்னாகரம் முள்ளுவாடியில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன், கொல்லமாரியம்மன் கோவிலின் ஆண்டு திருவிழா கடந்த ஏழு நாட்களாக மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. இந்த காலத்தில், அம்மன் சாரதி வாகனத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்டு ஊர்முழுவதும் ஊர்வலம் வந்தது. மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், வானவேடிக்கை உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏராளமான பெண்கள் முலைப்பாரி எடுத்துச் சென்ற ஊர்வலமும், பக்தி நிறைந்த சூழலை ஏற்படுத்தியது. இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளில் தீ மிதி விழா மற்றும் கிடா வெட்டுதல் இடம்பெற்றன. நூற்றுக்கணக்கான பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் தீமிதித்து, கிடா வெட்டி, தங்களது விருப்ப வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் ஊர் கவுண்டர் எம்.ஆர். கிருஷ்ணன், ஊர் மணியாகர் பி.ஆர். செல்வம், ஊர் நாய்க்கர் பி.சி. பாலகிருஷ்ணன், ஊர் முக்கியஸ்தர்கள் பி.எம். சுப்பிரமணியம், ஜி. கமலேசன், முருகன், சண்முகம், சரவணன், துரை, செல்வம், நாராயணசாமி, வேலு, ரகு, சிவக்குமார், அருள், ஜீவா, சுரேஷ், சிவக்குமார், சீனிவாசன், கோவில் பூசாரி வெங்கடேசன், ரமேஷ் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தியுள்ளனர்.