Type Here to Get Search Results !

பசுமை தருமபுரி இயக்கத்தில் மரக்கன்றுகள் நடுதல் – சுதந்திர தின விழாவில் ‘மை தருமபுரி’ அமைப்பினருக்கு ஆட்சியர் பாராட்டு.


தருமபுரி, ஆகஸ்ட் 15, 2025 (ஆடி 30) – 


ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் விழா ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., தலைமையில் தொடங்கப்பட்டது. இதில் மை தருமபுரி அமைப்பினர், தருமபுரி நகராட்சியுடன் இணைந்து, நகராட்சி முதியோர் இல்லம் அருகே 170 மரக்கன்றுகளையும், சாலை விநாயகர் சாலையில் 64 மரக்கன்றுகளையும் நட்டு பராமரித்து வருகின்றனர்.


இதற்கு முன்பு, ராமாக்காள் ஏரி தூய்மை செய்யும் பணி, விதைப்பந்துகள் தூவும் பணி மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற பசுமை பணிகளில் மை தருமபுரி அமைப்பினர் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையில், 79வது சுதந்திர தின விழாவில், ஆட்சித்தலைவர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.


மை தருமபுரி அமைப்பின் சார்பாக கௌரவத் தலைவர் C.K.M. ரமேஷ், நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் ஜலபதி ராஜா, ஒருங்கிணைப்பாளர்கள் அருணாச்சலம் அருள்மணி, அமைப்பாளர்கள் கிருஷ்ணன், சையத் ஜாபர், தன்னார்வலர்கள் கணேஷ், கோகுல்ராஜ், குணசீலன், அம்பிகா, வள்ளி, அருண் பிரசாத் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies