.jpg)
ஒகேனக்கல், ஆகஸ்ட் 02 | ஆடி 17 -
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில், சுற்றுலாத் துறை சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவின் தொடக்க நாளில், தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
உரையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து, “எடப்பாடி பழனிசாமி சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் பயணம் செய்வது காமெடி பீஸ் போல தெரிகிறது. மைக் செட் போட்டுக்கொண்டு அவர் பேசுவது பார்த்தாலே காமெடி பீஸ் மாதிரி தான் தோன்றுகிறது,” என்று கடுமையாக விமர்சித்தார்.
பாமக இளைஞர் தலைவர் அன்புமணியை குறித்தும் அவர், “அவர் ‘உரிமை மீட்போம்’ என்கிறார். எதை மீட்கப் போகிறார் என்பது அவருக்கே தெரியாது. 100 ஆண்டு சாதனை செய்தோம் என்று சொல்லி, பிறர் செய்தவற்றையும் நாங்க தான் செய்தோம் என்று கூறுகிறார்கள். இடஒதுக்கீடு கேட்டு போராடி, பேருந்தை நிறுத்தி, மரத்தை வெட்டியும் பார்த்தோம். அப்போதைய அதிமுக அரசு, எம்ஜிஆர் காலத்திலும் இதற்கு கவனம் இல்லை. அந்த போராட்டத்தில் 21 பேர் உயிரிழந்தனர்,” எனக் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின், கலைஞர் ராமதாஸ், வீரபாண்டியாரை அழைத்து பேசி இடஒதுக்கீடு வழங்கியதாகவும், இப்போது அன்புமணி மக்கள் உரிமையை மீட்கப் போவதாகச் சொல்வது புரியாததாகவும் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். “எந்த உரிமையை மீட்கப் போகிறார்? அப்பாவிடம் கேட்கப் போகிறாரா? அதிமுக பி-டீம் போல பயணம் செய்கிறார்கள். மக்கள் எங்களை அங்கீகரித்தார்கள், நாங்கள்தான் செய்தோம்,” என்றார்.
மேடையில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணியும் இருந்த நிலையில், பாமக இளைஞர் தலைவர் அன்புமணியையும் அதிமுகவையும் அமைச்சர் பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.