பொம்மிடி அடுத்த பையர்நத்தம் கிராமத்தில், தனியார் செல் கடை முன்பாக நேற்று இரவு பெரும் பதற்றம் நிலவியது.
செல் கடைக்காரர் ராசுகுட்டி (27) அவர்களை, மதுபோதையில் இருந்த வேலன் (25) தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், கடைக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கல்லால் அடித்து நொறுக்கியதும் தகவல்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ராசுகுட்டியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் சாலையில் மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் மேல் அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தியதில், குற்றவாளி வேலனை 8 மணி நேரத்துக்குள் கைது செய்வதாக தர்மபுரி மாவட்ட எஸ்பி மற்றும் அரூர் டிஎஸ்பி உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கலைந்தது.
சமூகத்தில் பெரும் பதற்றம் ஏற்படும் சூழ்நிலை காணப்பட்டதால், இரவு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.