Type Here to Get Search Results !

தருமபுரி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தருமபுரி, ஆக 19 | ஆவணி 3 –


முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அறிவித்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், இன்று தருமபுரி நகராட்சி செங்குந்தர் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு, உடனடியாக 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பட்டா மாற்றம், பிறப்பு சான்றிதழ்கள், மின்சார இணைப்பு பெயர் மாற்ற ஆணைகள், வேலை உறுதி திட்ட அடையாள அட்டைகள், மருத்துவ காப்பீட்டு அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன. மருத்துவ துறையின் சார்பில் மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.


மொத்தத்தில், தருமபுரி மாவட்டத்தில் அக்டோபர் 3 வரை 176 முகாம்கள் நடைபெறவுள்ளன. நகர்ப்புறங்களில் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் 46 சேவைகள் வழங்கப்பட உள்ளன. மனுக்கள் உடனடியாகத் தீர்க்கப்படக்கூடியவைகளுக்கு உடனடியாகவும், பிறவற்றிற்கு 45 நாட்களுக்குள் தீர்வு அளிக்கப்படும்.


நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies