![]() |
*கோப்புப்படம் |
தருமபுரி, ஆகஸ்ட் 12 | ஆடி 27 –
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் வரும் ஆகஸ்ட் 15, 2025 அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் ஆணையரின் அறிவுரைகளின் பேரில் நடைபெறும் இக்கூட்டங்களுக்கு, அனைத்து தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்வார்கள். ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளரும், ஒவ்வொரு ஒன்றியத்திலும் உதவி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் நிலை ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள முக்கிய அம்சங்கள்
-
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம்.
-
கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை.
-
தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது.
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்.
-
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II.
-
ஜல் ஜீவன் திட்டம்.
-
இதர உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள்.
மாவட்டம் முழுவதும் நடைபெறும் இந்த கிராம சபைக் கூட்டங்கள், உள்ளூர் நிர்வாகத் தீர்மானங்கள் மற்றும் பொதுநலன் தொடர்பான திட்டங்களை மக்களுடன் நேரடியாகப் பகிரும் வாய்ப்பாக இருக்கும் என அவர் கூறினார்.