தருமபுரி, ஆகஸ்ட் 12 | ஆடி 27 -
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், சென்னை தண்டையார்பேட்டை கோபால் நகரில் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” இன்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம், மாநிலம் முழுவதும் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய ரேஷன் பொருட்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பாலஜங்கமனஹள்ளி ஊராட்சியில், கூட்டுறவுத்துறை சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இஆப., அவர்கள் திட்டத்தை மாவட்ட அளவில் தொடங்கி வைத்து, முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவைகளையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வட்ட வாரியான விபரங்கள்
-
தருமபுரி: 3,796 குடும்ப அட்டைகள் – 5,148 பயனாளிகள்
-
நல்லம்பள்ளி: 3,304 குடும்ப அட்டைகள் – 4,443 பயனாளிகள்
-
பென்னாகரம்: 4,413 குடும்ப அட்டைகள் – 5,915 பயனாளிகள்
-
பாலக்கோடு: 2,851 குடும்ப அட்டைகள் – 3,813 பயனாளிகள்
-
காரிமங்கலம்: 2,531 குடும்ப அட்டைகள் – 3,316 பயனாளிகள்
-
அரூர்: 3,985 குடும்ப அட்டைகள் – 5,205 பயனாளிகள்
-
பாப்பிரெட்டிப்பட்டி: 5,901 குடும்ப அட்டைகள் – 7,545 பயனாளிகள்
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைய வழிவகுக்கும் இந்தத் திட்டம், உணவுப் பாதுகாப்பையும் சமூக நலனையும் வலுப்படுத்தும் வகையில் அமையும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.