தருமபுரி, ஆகஸ்ட் 12 | ஆடி 27 –
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களால் ஆகஸ்ட் 16 (சனிக்கிழமை) மற்றும் ஆகஸ்ட் 17 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் பிற ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பில், இந்தக் காலப்பகுதியில் தடையை மீறி ட்ரோன்கள் பறக்கவிட்டால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அரசு நிகழ்ச்சி காலத்தில் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.